மகாசிவராத்திரியை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 275 சிவாலயங்களுக்கு 21 வகை அபிஷேக பொருட்களை திருக்கோவில் வழிபாட்டு குழுவினர் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிதிவசதி இல்லாத 275 சிவாலயங்களுக்கு எண்ணெய், நெய், தேன், பூஜை பொருட்கள் மற்றும் அம்பாள் வஸ்திரங்களை திருக்கோயில் வழிபாட்டு குழுவினர் வழங்கினர்.
பராமரிப்பு இல்லாத சிவலாயங்களை கண்டறிந்து வருடந்தோரும் சிவாலய திருதொண்டு இயக்கம் சார்பில் அபிஷேக பொருட்கள் வழங்கப்பட்டு வருதாக தெரிவித்தனர். மேலும், அறநிலையத்துறையினரும் இதுபோன்று பாராமரிப்பு இல்லாத சிவாலயங்களை கண்டறிந்து மஹா சிவராத்திரிக்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.