ராமேஸ்வரம் நகர்ப் பகுதியில் பகல் நேரத்தில் பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், திடீரென பெய்த மழையால், ராமேஸ்வரம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காலை நேரத்தில் சாரல் மழையாக தொடங்கிய மழை, படிப்படியாக வலுவடைந்து, காற்றுடன் கனமழையாக பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.