மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வயலில் இருந்த வைகோலை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது மின் கம்பி உரசியதால், தீப்பற்றி எரிந்தது.
பச்சைபெருமாள் நல்லூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நெல் வயலில் நடந்த இந்த தீ விபத்தால், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பல வைகோல் கட்டுகளும் தீக்கிரையாகின.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.