சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சீக்கிய பாதுகாவலர்கள் இருவர் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து, நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரிழந்தனர்.
டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் பல சீக்கியர்கள் தாக்குதலில் உயிரிழந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.