சமூக வலைதள கணக்கை பாகஜகவுக்கு வாடகைக்கு விட்டு 18 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றதாக அவதூறு கூறிய கேரள காங்கிரஸுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை ப்ரீத்தி ஜிந்தா நியூ இண்டியா கோ ஆபரேட்டிவ் வங்கியில் 10 ஆண்டுகளுக்கு முன் 18 கோடி ரூபாய் கடன் பெற்றார். பின்னர், எவ்வித பாக்கியும் இல்லாமல் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்திய நிலையில், காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.