மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி அண்ணாமலையார் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு நந்தி பகவானை வழிபட்டனர்.
இதேபோல் கன்னியாகுமரியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஹா சிவாலய ஓட்டம் நடைபெற்றது. திருமலை, திக்குறிச்சி, திரூநந்திக்கரை , பொன்மனை கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.