ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது இல்லை என மத்திய சட்ட அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல என தெரிவித்துள்ளது.
அப்படி, ஒரு சேர தேர்தல் நடத்தினால், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சீர்குலைந்துவிடப் போவதில்லை எனவும், சட்ட அமைச்சகத்தின் வரைவுக்குழு விளக்கமளித்துள்ளது.