ஆந்திராவில் வனப்பகுதி வழியாக கோயிலுக்கு நடந்து சென்றவர்களை யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் பலியாகினர்.
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள குண்டலகோனா சிவன் கோயிலுக்கு, சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் வனப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது நள்ளிரவில் அங்கு வந்த காட்டு யானை கும்பல் திடீரென பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.