சென்னையில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 500 மாநகராட்சி பள்ளி மாணவிகள், தற்காப்பு கலை நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர் .
சென்னை எழும்பூர் நேரு பூங்காவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டுத் திடலில் தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 417 பள்ளிகளில் 29 பள்ளிகளில் 1500 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக, ஒரே நேரத்தில் ஆயிரத்து 500 மாநகராட்சி பள்ளி மாணவிகள், தற்காப்பு கலை நிகழ்த்தி 3 உலகச் சாதனை நிகழ்த்தி, சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.