ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மத்திய அரசின் திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இ சேவை மையத்தினர் மீது பாஜக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நால்ரோடு அருகே சதீஷ்குமார் என்பவர் இ-சேவை மையம் ஒன்றை நடத்திவந்தார். அங்கு, மத்திய அரசின் திட்ட பெயர்களை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு கடன் தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.
இதை நம்பிய பலர், தங்களது முக்கிய ஆவணங்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அறிந்த பாஜகவினர் இ-சேவை மையத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது மத்திய அரசு திட்டங்களை கூறி மக்களை சதீஷ்குமார் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாஜக சார்பில் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.