மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகின்ற மகாசிவராத்திரி தினமான இன்று, தேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஆரோக்கியமும், வேண்டிய செல்வமும் கிடைத்து மகிழ்வோடு வாழ எம்பெருமான் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.