ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ராமநாதசுவாமி கோயிலில் கடந்த 18ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது ஓம் நமச்சிவாயா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.