தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவிக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவர், தனது கணவரான அழகுராஜாவின் ஆயுள் அதிகரிப்புக்காக ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அவரது கணவர், சிறுமியுடன் தனிமையில் இருந்தால் ஆயுள் அதிகரிக்கும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராமலட்சுமி, தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்துக்கு சென்று, அங்கு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் பழைய வத்தலக்குண்டுவில் உள்ள ஓர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமியை அழகுராஜா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபணமானதை அடுத்து, அழகுராஜா – ராமலட்சுமி தம்பதிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.