தமிழ் வளர்ச்சிக்காக திமுகவினர் என்ன செய்தனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற ஜிகே மணி இல்லத்திருமண விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். மணமக்களை வாழ்த்திய அவர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழை வைத்து திமுக அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
மத்திய அரசு கூறுவதை ஏற்க மறுக்கும் திமுக, தமிழகத்திற்கு மத்திய அரசின் நிதி வேண்டாம் என எண்ணாதது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்க திமுக என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.