இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை கேரளாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவரான சுரேஷ்குமார் என்பவர் 2014ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக வழிப்பறி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அப்துல் ஹக்கிம் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கேரளாவில் பதுங்கியிருந்த அப்துல் ஹக்கிமை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.