தாம்பரம் அருகே தொப்புள் கொடியுடன் குப்பைகளுக்கு இடையே உயிருடன் இருந்த பெண் சிசுவை போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
சென்ன தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகர் பிராதான சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் இடையே தொப்புள் கொடியுடன் பெண் சிசு அழுது கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிசுவை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனை அடுத்து குப்பைகளுக்கு நடுவில் சிசுவை வீசி சென்றது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், 20 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சிசுவை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அதே தெருவில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் மகள் என்பது தெரியவந்தது.
மேலும், இளம்பெண் 3ஆம் ஆண்டு படிக்கும்போது கர்ப்பமானதால், அவரது தாயே பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தாயிடம் சிசு ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.