சென்னையில் வீட்டில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வரும் 54 வயது மதிக்கத்தக்க பெண் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆர்டர் செய்த வீட்டு உபயோகப் பொருட்களை டெலிவரி செய்ய வந்த டெலிவரி ஊழியர், பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட , டெலிவரி ஊழியர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் அளித்த புகாரின் பேரில், டெலிவரி ஊழியரான சதீஷ் குமாரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவரது செல்போனை சோதனை செய்தபோது அதில் பெண் குளிக்கும் வீடியோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.