தமிழகத்தில் வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இயக்கம் திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜக புதிய கட்டட அலுவலக திறப்பு விழாவில் பேசிய அண்ணாமலை, பிரதமரால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை முதல்வர் மருந்தகம் என பெயர் மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படுத்தியுள்ளார் என குற்றம்சாட்டினார்.
மருத்துவக் கல்வியை தாய் மொழியில் கற்பிக்க கூறிய அமித்ஷா, எவ்வாறு இந்தியை திணிப்பார் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். வாரணாசி பல்கலைக்கழகத்தில் பாரதிக்கு இருக்கை அமைத்து, பிரதமர் மோடி தமிழை நேசித்துக் கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், பாஜக அரசின் ஆட்சியிலேயே மத்திய அரசின் குறிப்பிட்ட துறைகளுக்கான தேர்வை 13 பிராந்திய மொழிகளில் நடத்தவும் உத்தரவிடப்பட்டது என அவர் கூறினார். இண்டி கூட்டணி கட்சியின் ஆட்சிகள் அகற்றப்படும் போது, இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க உள்ளது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.