வளசரவாக்கம் அருகே இளைஞர் மீது மதுபோதையில் இருந்த 3 பேர் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் மது அருந்திய மூன்று பேர், சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அந்த இளைஞர் படுகாயமடைந்து சரிந்து விழவே, அதையும் பொருட்படுத்தாமல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் தப்பியோடிய நிலையில், இருவர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர்.