ஹைப்பர்லுாப் என்ற அதிவேகமாக பயண முறை குறித்து தற்போது பார்க்கலாம்.
‘லுாப்’ எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதி தயாரிக்கப்பட்டு, அதில் பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற வாகனம் இயக்கப்படும்.
ஒரு பெட்டியில் 24 முதல் 28 பேர் பயணிக்க முடியும். ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு நடுவில் எங்கும் நிற்காமல் பாயின்ட் டூ பாயின்டாக இந்த வாகனம் சென்றடையும். இந்த குழாயில் காற்றழுத்தம் இருக்காது என்பதால், காற்றால் ஏற்படும் தடை இருக்காது.
அதனால் இந்த ரயிலை அதிக வேகத்தில் இயக்க முடியும் என கூறப்படுகிறது.
சாதாரணமான வாகனங்களுக்கு உராய்வு ஏற்படுவது போல இதில் உராய்வு இருக்காது. ரயில் பாதையில் இருந்து சில அங்குல உயரத்தில் காந்த சக்தியில் இந்த வாகனம் இயங்கும்.
ஒரு நேரத்தில் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படும் என்பதால், மோதி விபத்துக்குள்ளாவதற்கு வாய்ப்பு இல்லை. ஹைப்பர்லூப் ரயில்களை இயக்க மிகவும் குறைந்த எரிசக்தி போதும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.