எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காக தேர்தல் ஆணையம் செயல்படும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு வருகை தந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் தேர்தல் பணி தொடர்பாக அதிகாரிகளுடன ஆய்வு நடத்தியதாக தெரிவித்தார்.
தேசத்திற்கான முதல் பணி வாக்களிப்பது தான் என்றும், 18 வயது பூர்த்தியான அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் நலனுக்காக செயல்படும் எனவும் அவர் தெரிவித்தார்.