அர்ஜென்டினாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
மார் டெல் பிளாட்டா பகுதியில் கடற்கரையில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், கடந்த 23-ம் தேதி கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறியது.
தற்போது வரை நிறம் மாறாமல் இருப்பதால் இதனை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறியது தொடர்பாக விஞ்ஞானிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.