ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்காததால் சிதலமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட புதுமை காலனியில் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் சார்பில் 464 குடியிருப்புகள் கட்டப்பட்டன.
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டதால், குடியிருப்பில் உள்ள மின்தூக்கி சாதனங்கள், மின் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் சமூக விரோதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், நீர்த்தொட்டிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் சேதமடந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, புதுமை காலனியில் உள்ள குடியிருப்புகளை சீரமைத்து, சாலையோரங்களில் வசிப்போருக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.