உதகையில் ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த அப்துல் வகாப், மெல்சர் பால், சுஜன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
3 பேரும் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தததால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களின் பையை சோதனை செய்தபோது அதில் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.