இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.
ஐரோப்பாவின் தென் இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள இந்த எட்னா எரிமலை, இதுவரை 90-க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது.
அதனைதொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு எரிமலை மீண்டும் வெடித்தது. ஆனால் தற்போது வரை கட்டுக்கடங்காமல் நெருப்பு பிழம்புகளை வெளியேற்றுகிறது.
மேலும், தொடர்ந்து வெளியேறும் விண்ணை முட்டும் அளவிலான கரும்புகையால் பார்க்கும் இடமெல்லாம் சாம்பலாக காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் மூச்சுத்திணறலால் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.