திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே பொதுமக்களே தங்களது சொந்த செலவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செங்குணம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் குடியிருப்புவாசிகள், தரமான சாலை அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இருப்பினும் அதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொறுமையிழந்த குடியிருப்புவாசிகள், தங்களது சொந்த செலவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இனிமேலாவது அரசு தங்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.