சென்னை சூளைமேடு பகுதியில் Cocaine போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மயூர் புராட் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ஊரப்பாக்கத்தை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Cocaine போதைப்பொருளை விநியோகம் செய்த நைஜீரியாவை சேர்ந்த எக்கோ நெத்தியை மும்பையில் வைத்து காவல் துறை கைது செய்தது. மேலும் அவரிடம் இருந்து 5 கிராம் கொக்கை போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.