பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் அந்த அணியின் இப்ராகிம் ஜத்ரன், அதிரடியாக ஆடினார்.
12 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 177 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது