ஆந்திராவில் மஹா சிவராத்திரியையொட்டி கோதாவரி நதியில் குளிக்க சென்ற 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடிபுடி கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் குளிக்க சென்றனர்.
ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் ஒருவர் பின் ஒருவராக 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.