மொழியை வைத்து 60 ஆண்டுகளாக திமுக நாடகம் ஆடுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழக வெற்றிக் கழக மேடையில் இந்தி திணிப்புக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் கையெழுத்திடாததை, தான் வரவேற்பதாக தெரிவித்தார்.
விஜய் எதை நோக்கி #GETOUT கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார் என தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவெக கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் வருந்தத்தக்கது என்றும், வாக்கு விழுக்காடை உயர்த்துவது மட்டுமல்ல, ஆட்சியை பிடிப்பதும் நோக்கம்தான் என்றும் அவர் கூறினார். மொழியை வைத்து 60 ஆண்டுகளாக திமுக அரசியல் நாடகம் போடுவதாகவும் சீமான் கூறினார்.