உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை விஜய் அழைத்து வந்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர், பீகார் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்காத பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்தால், அந்த கட்சியின் வெற்றி எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
திமுகவுக்கு ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார் என்றும், அவரை எப்படி எதிர்கொள்வது என்பது தமிழக முதல்வருக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.