பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜிபேஷ் குமார், சஞ்சய் சரயோகி, சுனில் குமார், ராஜூ குமார் சிங், மோதி லால் பிரசாத், விஜய் குமார் மண்டல், கிருஷ்ண குமார் மந்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.