நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்தது.
அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டம் கடையம், பாப்பான்குளம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.