ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு
மஞ்சு விரட்டு நடைபெற்றது.
இளங்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும்நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர்.