தமிழக பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்பது புத்திசாலித்தனம் என ஜோஹோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவில், ஜோஹோ நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும், தமிழகத்தின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பொறியாளர்கள், மும்பை, டில்லியில் உள்ள ஜோஹோ வாடிக்கையாளர்களுடன் எவ்வித தயக்கமும் இன்றி பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரும்பாலான தமிழக மக்களுக்கு பெரிய குறைபாடு என சுட்டிக்காட்டியுள்ள அவர், ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம் என கூறியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைவிடாமல் ஹிந்தி படிக்க கற்றுக் கொண்டதால், தற்போது ஹிந்தியில் பேசுவதை தம்மால் 20 சதவீதம் புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும் எனக்கூறியுள்ள அவர், அரசியலை புறக்கணித்து விட்டு ஹிந்தி கற்போம் என குறிப்பிட்டுள்ளார்.