கட்டட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பொது பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் சுய தொழில் புரிவோர் மற்றும் அனைத்து விதமான மாத சம்பளதாரர்களும் இணையலாம் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சேமிப்பு கட்டமைப்பை சீரமைப்பதற்காக இத்திட்டம் அறிமுகமாக உள்ளதாகவும், அனைத்து தரப்பினருக்கும் மிகுந்த பாதுகாப்பு வழங்குவதாக இந்த திட்டம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது முழுக்க முழுக்க தன்னார்வ ஓய்வூதிய திட்டம் என தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.