மாணவர்கள் செல்போனை அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்றும், ஒருநாள் முழுவதும் செல்போன் இல்லாமல் மாணவர்கள் இருக்க வேண்டும் எனவும் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கேட்டுக்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின் பேரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சமுத்திரக்கனி கலந்து கொண்டு மாணவர்கள் இடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பெண்கள் மீது மாணவர்கள் மரியாதை வைக்க வேண்டும் என்றும், பெண்களை சக தோழிகளாக, சகோதரிகளாக பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.