தவெக தலைவர் விஜய் தம்மை எம்ஜிஆர் என நினைத்து வருவதாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னை அடுத்த எண்ணூரில் உள்ள உலகை காத்தம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தி பதாகைகளை அழிப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் அழிப்பது சட்டவிரோத செயல் என தெரிவித்தார். பிரசாந்த் கிஷோர் கூறுவதை விஜய் நடித்து காட்டுவதாகவும், விஜய் ட்விட்டர் அரசியல் செய்து வருவதாகவும் சாடினார்.