காட்டுமன்னார்கோவில் அருகே தாய் பெயரில் இருந்த வீட்டினை போலி இறப்பு சான்றிதழ் வாங்கி அவரது மகள் அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணந்தபுரத்தில் வசித்து வரும் கல்யாணி என்ற மூதாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர்.
இதில், 2 மகன்கள் உயிரிழந்த நிலையில், தமக்கு சொந்தமான மாடி வீட்டை மகள் பானுமதி, மகன் தமிழ்மணி ஆகியோரின் பெயரில் மூதாட்டி எழுதி கொடுத்துள்ளார்.
இதனிடையே, தாய் பெயரில் இருந்து வீட்டினை போலி இறப்பு சான்றிதழ் :மூலம் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து மகள் பானுமதி 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை கடந்த 3 ஆண்டுகளாக திருப்பி செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஏலம் விடப்போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
இதனை கேட்டு பதறிப்போன மூதாட்டி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அளித்துள்ள மூதாட்டி, தமது வீட்டினை மீட்டு தர மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தாயின் இறப்பு சான்றிதழ் பெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.