ஈரோட்டில் வீட்டிற்குள் புகுந்து ஏ.சி.மெக்கானிக்கான ஸ்ரீதர் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானியான ஸ்ரீதர் என்பவருக்கு சௌமியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் சௌமியா பணியாற்றி வரும் நிலையில், மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது ஸ்ரீதர், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி சௌமியா, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 24ம் தேதி மது அருந்தியபோது நண்பர்கள் பாலமுருகன், தமிழரசன் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.