காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 57 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு சந்நிதிகளில் உள்ள 11 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 5 மாதங்களுக்கு பிறகு எண்ணப்பட்டன.
கோயில் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் ஈடுபட்டனர்.
முடிவில் உண்டியல் காணிக்கையாக ரூ.57 லட்சத்து 20 ஆயிரத்து 727 ரொக்க பணமும், 91 கிராம் 340 மில்லி தங்க நகைகளும், 311 கிராம்750 மில்லி வெள்ளிபொருட்களும் பெறப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.