அரியலூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம் அடுத்த கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அரியலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவியை கடந்த சில தினங்களுக்கு முன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.