நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அடிப்படையில், திருத்தப்பட்ட வக்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இதையடுத்து வக்பு மசோதா குறித்த 655 பக்கங்களை கொண்ட கூட்டுக்குழு அறிக்கை இம்மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அடிப்படையில், திருத்தப்பட்ட வக்பு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
10ஆம் தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.