சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு செவிலியரும், ஓட்டுநரும் ஆம்புலன்சில் மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர்.
நாட்டரசன்கோட்டை அருகே வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், செவிலியர் மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் பெரியண்ணன் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.