பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்தது மாநில அரசு தான் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் “உதான் யாத்ரி கபே” எனும் பெயரிலான மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்தடுத்து பல விமான நிலையங்களில் இத்திட்டம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
விமான நிலையம் அமைக்க பரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என தெரிவித்த அவர், இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பரந்தூரில் விமான நிலையம் தொடர்பாக டெல்லியில் விரைவில்ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.