திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர் காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், பொதுமக்கள் மற்றும் தவெக உறுப்பினர்களிடம் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து இளைஞர் காங்கிரஸுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வினர், பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் சோல்ஜர் மேத்யூ ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.