கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மொத்த அரிய வகை கனிமங்களில் 5 சதவீதம் உக்ரைனில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, லித்தியம், கிராபைட் உள்ளிட்ட கனிம வளங்கள் அபரிமிதமாக உள்ளன. ராணுவம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்புக்கு இந்த கனிமங்கள் தேவை.
இந்த நிலையில், கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் அதிபர் நாளை கையெழுத்திடுவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.