வாழப்பாடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், கால்நடை மருத்துவர் குழுவினரின் பரிசோதனைக்கு பிறகே காளைகள் போட்டியில் அனுமதிக்கப்பட்டன.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கிய நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டுகளித்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்காக 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.