புதுக்கோட்டையில் உள்ள முனியாண்டவர் – பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் முனியாண்டவர் – பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் வருடாந்திர திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி கோலகலமாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 12 காளைகளும், குழுவுக்கு 9 பேர் வீதம் 12 குழுக்களாக 108 வீரர்களும் பங்கேற்று காளைகளை தழுவினர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அனல் பறந்த போட்டியை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.