நெல்லை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செட்டிகுளத்தை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் அஞ்சுகிராமம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பழவூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பின்னால் வந்த கிரேன் வாகனம் முத்துலிங்கம் மீது ஏறியதால் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.